எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி ஒன்றியம், பாப்பாத்திக்காடு கிராமத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியையும், மூலக்காடு கிராமத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியையும் துவக்கி வைத்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 13.3.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வரும் கல்வி ஆண்டில், 5 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும். மேலும், 10 அரசு தொடக்கப் பள்ளிகள் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவைப்படும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். மேலும், தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும் என்றும், வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 26 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் செய்து கொடுப்பதுடன், தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 9 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், 20.3.2020 அன்று முதலமைச்சர் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பல்வேறு தரப்பினரிடமிருந்தும், பெற்றோர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், ஏற்கனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக, 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், மேலும் 30 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
மேற்கண்ட அறிவிப்புகளுக்கு இணங்க மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், 25 புதிய தொடக்கப்பள்ளிகள் துவங்கிடவும், 10 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் ஆணைகள் வெளியிடப்பட்டன. மேலும் முதற்கட்டமாக 35 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை, அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், 40 அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை, அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் அரசாணைகள் வெளியிடப்பட்டன.
அதன்படி, முதல்வர், சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி ஒன்றியம், பாப்பாத்திக்காடு கிராமத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியையும், மூலக்காடு கிராமத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியையும் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், பள்ளிக் கல்வி ஆணையர் என்.வெங்கடேஷ், பள்ளிக் கல்வித் இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பழனிச்சாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
உலக தடகள போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி
24 Aug 2025சென்னை : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி பெற்றார்.
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு ரகானே வாழ்த்து
24 Aug 2025புதுடெல்லி : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு ரகானே வாழ்த்து தெரிவத்தார்.
-
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி
24 Aug 2025செயிண்ட் லூசியா : செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.
-
ஒருநாள் கிரிக்கெட்: 47 பந்துகளில் சதம் அடித்து கேமரூன் கிரீன் சாதனை
24 Aug 2025மெக்காய் : ஒருநாள் கிரிக்கெட்டில் 47 பந்துகளில் சதம் அடித்து கேமரூன் கிரீன் சாதனை படைத்தார்.
-
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து புஜாரா ஓய்வு
24 Aug 2025மும்பை : சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து பிஜாரா ஓய்வு செய்வதாக அறிவித்தார்.
-
ஆசிய கோப்பை: பும்ரா போட்டிகளில் விளையாட மாட்டார் - வில்லியர்ஸ்
24 Aug 2025கேப்டவுன் : ஆசிய கோப்பை போட்டிகளில் பும்ரா அணைத்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று வில்லியர்ஸ் கூறினார்.