Idhayam Matrimony

ஒருநாள் கிரிக்கெட்: 47 பந்துகளில் சதம் அடித்து கேமரூன் கிரீன் சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Cameron-Green 2025-08-24

Source: provided

மெக்காய் : ஒருநாள் கிரிக்கெட்டில் 47 பந்துகளில் சதம் அடித்து கேமரூன் கிரீன்  சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் நேற்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் இருவரும் களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 250 ரன்கள் குவித்த நிலையில் பிரிந்தது. அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 142 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் சதம் அடித்த நிலையில் அவுட்டானார்.

அதன்பின் கேமரூன் கிரீன் - அலெக்ஸ் கேரி கூட்டணி ரன் வேகத்தை கணிசமாக உயர்த்தினர். குறிப்பாக தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கிய கேமரூன் கிரீன் வெறும் 47 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த 2-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை கேமரூன் கிரீன் படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து