Idhayam Matrimony

செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Night-Riders-win 2025-08-24

Source: provided

செயிண்ட் லூசியா : செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.

கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற (இந்திய நேரப்படி) 10-வது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லூசியா கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி கீரன் பொல்லார்டின் அதிரடி அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பொல்லார்டு 29 பந்துகளில் 65 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன டிம் சீபர்ட் (35 ரன்கள்) மற்றும் ஜான்சன் சார்லஸ் (47 ரன்கள்) வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஆனால் பின்வரிசை வீரர்கள் சொதப்பினர். ரோஸ்டன் சேஸ் 12 ரன்களிலும், டிம் டேவிட் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

20 ஓவர்கள் முடிவில் செயிண்ட் லூசியா கிங்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. பொல்லார்டு ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து