முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நதிநீர் பிரச்சினைகளை விவாதிக்க தென்மண்டல கவுன்சில் கூட்டம்; அமித்ஷா தலைமையில் திருப்பதியில் நடக்கிறது

சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதடெல்லி : தென்மாநிலங்களின் நதிநீர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தென்மண்டல கவுன்சில் என்ற அமைப்பு உள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்கள் உறுப்பினர்களாகவும், அந்தமான், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்கள் சிறப்பு அழைப்பாளர்களாகவும் உள்ளன. 

தென்மண்டல கவுன்சிலின் 29-வது கூட்டம், ஆந்திர மாநிலம் திருப்பதியில் மார்ச் 4-ந் தேதி நடக்கிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார். 

தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் துணைநிலை கவர்னர்கள், நிர்வாகிகள் ஆகியோர் இதில் கலந்து கொள்கிறார்கள். தங்கள் மாநிலத்தின் தலைமை செயலாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சேர்ந்து பங்கேற்கிறார்கள். 

இந்த கூட்டத்தில், நதிநீர் பங்கீட்டு பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. தமிழ்நாடு-கர்நாடகா இடையிலான காவிரி பிரச்சினை, தமிழ்நாடு-கேரளா இடையிலான முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை ஆகியவை பற்றி ஆலோசிக்கப்படுகிறது. 

ஆந்திரா-தெலுங்கானா இடையிலான கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் பங்கீட்டு பிரச்சினை, அங்கு 2 மாநிலங்களும் தன்னிச்சையாக தொடங்கி உள்ள போலாவரம், காலேஸ்வரம் ஆகிய திட்டங்கள் குறித்தும் பேசப்படுகிறது. இதுதொடர்பாக இரு மாநிலங்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்ட அறிக்கை தயாரித்து வைத்துள்ளனர். 

ஆந்திரா-தெலுங்கானா-கர்நாடகா ஆகிய 3 மாநிலங்கள் இடையிலான அலமாதி அணை பிரச்சினை பற்றியும் விவாதிக்கப்படுகிறது. மேலும், தென்னிந்தியாவின் முக்கிய நதிகளான கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, பெண்ணாறு, மகாநதி ஆகியவற்றை இணைத்து நதிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து