வரும் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றியை பெறும்: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு

திங்கட்கிழமை, 1 மார்ச் 2021      தமிழகம்
GK-Vasan 2020 12 20

Source: provided

கும்மிடிப்பூண்டி : வரும் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றியை பெறும் என்றும், தேர்தல் குறித்த கருத்து கணிப்பைவிட மக்கள் கணிப்புதான் முக்கியம் என்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

த.மா.கா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் நண்பரும் த.மா.கா மூத்த நிர்வாகி வழக்கறிஞர் சி.ஆர்.தசரதனின் மறைவையொட்டி கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரத்தில் அவரது திருவுருவப் படத்தை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். நிகழ்விற்கு த.மா.காா திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் த.மா.கா. தலைவர் எஸ்.சேகர் முன்னிலை வகித்தார். 

நிகழ்வில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பி.பலராமன், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், அ.தி.மு.க நிர்வாகிகள் பி.ரவிச்சந்திரன், கோபால்நாயுடு, கோவி.நாராயணமூர்த்தி, அபிராமன், மு.க.சேகர், டி.சி.மகேந்திரன், பாமக மாநில துணை பொது செயலாளர் துரை ஜெயவேலு, காங்கிரஸ் மாநில துணை பொது செயலாளர் எம்.சம்பத், திமுக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஷ்வரி, பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன் வாழ்த்துரை வழங்கினர். 

தொடர்ந்து வழக்கறிஞர் சி.ஆர்.தசரதன் திருவுருவப் படத்தை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்து பேசும் போது, 

த.மா.கா. கட்சியை ஜி.கே.மூப்பனார் துவக்கிய காலத்திலேயே அவருக்கு ஆலோசனைகளை வழங்கியவர் வழக்கறிஞர் சி.ஆர்.தசரதன் என்று புகழாரம் சூட்டினார். மேலும் பேசியவர் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடை த.மா.கா. சார்பில் சுமூகமான முறையில் பேசி தீர்த்துக் கொள்வோம். பெட்ரோல், டீசல் விலை வரும் நாள்களில் குறையக் கூடிய உறுதியான நிலையை மத்திய அரசு எடுக்கும் அதற்குன்டான பணிகளை செய்துக் கொண்டிருப்பதாக அத்துறையின் மத்திய அமைச்சர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார்.

தேர்தல் குறித்த கருத்து கணிப்பை விட மக்கள் கணிப்புதான் முக்கியம். வரும் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றியை பெறும் என்று ஜி.கே.வாசன் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து