5 மாநில தேர்தல்: பிரதமர் மோடி, அமித்ஷா ஆலோசனை

வியாழக்கிழமை, 4 மார்ச் 2021      இந்தியா
Modi 2021 03 01

5 மாநிலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டெல்லியில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழுக் கூட்டத்துடன் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டனர். 

தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  இந்த கூட்டத்தில் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து