முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14-வது ஐ.பி.எல். அட்டவணை வெளியீடு: ஏப். 9-ம் தேதி, முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 7 மார்ச் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்கும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. 

நடப்பாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) நேற்று வெளியிட்டது. அதன்படி, வரும் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி அணியுடன் மும்பையில் மோதுகிறது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிளேஆஃப் சுற்றுகளும், இறுதிப் போட்டியும் நடக்கிறது. மொத்தம் 52 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டி தொடர் மே 30-ம் தேதி நிறைவடைகிறது.

சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத் ஆகிய மைதானங்களில்  நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.  கொரோனா வைரஸ் காரணமாக கடந்தாண்டு ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. இந்தாண்டு இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை நடத்த பிசிசிஐ முனைப்பு காட்டி வந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 9-ம் தேதி ஐ.பி.எல் தொடர் நடைபெற உள்ளது. ஆனால் அனைத்து உள்ளூர் அணிகள் மோதும் போட்டியும் வேறு மாநில மைதனாத்தில் நடைபெறுவது போன்று அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போட்டிகள் நடைபெற்றாலும் சி.எஸ்.கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவில்லை. மும்பை, பெங்களூரு, கொல்கத்தாவில் மட்டுமே சி.எஸ்.கே போட்டிகள் நடைபெற உள்ளது.

இதேப் போன்று மற்ற அணிகளுக்கும் போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல் 2021  தொடரின் ப்ளே ஆஃப் மற்றும்  இறுதிப்போட்டி அகமாதபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 30-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்றும் அறிவிக்ப்பட்டுள்ளது. பிற்பகல் போட்டிகள் 3.30 மணிக்கும் இரவு நடைபெறும் போட்டிகள் 7.30 மணிக்கும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து