முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே தனியார்மயமாக்கப்படாது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி

செவ்வாய்க்கிழமை, 16 மார்ச் 2021      இந்தியா
Image Unavailable

ரயில்வே தனியார்மயமாக்கப்படாது என்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிபடத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அவையில் நேற்று ரயில்வே துறைக்கு கோரப்படும் மானியங்கள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது பேசிய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது. இது ஒவ்வொரு இந்தியரின் சொத்து என்று மேலும் கூறினார். 

ரயில்வே துறை இந்திய அரசிடம் தான் இருக்கும் என்று தெரிவித்த அவர், அரசு மற்றும் தனியார் துறைகள் ஒன்றிணைந்து செயல்படும்போது தான் நாடு அதிக வளர்ச்சியை நோக்கி முன்னேறவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் என்று குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய அவர் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு, ரயில்வே முதலீட்டை கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் கோடியில் இருந்து 2021-22 நிதியாண்டில் ரூ.2.15 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது என்று கூறினார். 

மேலும் பயணிகளின் பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்துவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில் விபத்து காரணமாக பயணிகள் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் ரயில் விபத்து காரணமாக கடைசி உயிரிழப்பு 2019 மார்ச் மாதம் நடந்தது என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து