எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : காரில் பயணித்த போது கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா 6 முறை சீட் பெல்ட் அணியாமல் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து அவர் அபராதம் செலுத்தினார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, அரசு சார்பில் வழங்கப்பட்ட இனோவா காரை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில், சித்தராமையா பயன்படுத்தி வரும் கார் 7 முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி சந்திரிகா ஹோட்டல் பகுதியில் சென்றபோதும், அதே ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி பழைய விமான நிலையச் சாலையில் லீலா பேலஸ் சந்திப்பு அருகிலும், ஆகஸ்ட் 20-ம் தேதி சிவானந்த சர்க்கிள் பகுதியிலும் காரில் சென்றபோதும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சித்தராமையா சீட் பெல்ட் அணியாமல் சென்றுள்ளார். மொத்தம் 6 முறை சித்தராமையா சீட் பெல்ட் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார். இது அந்தந்த பகுதிகளில் உள்ள நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும், இந்த ஆண்டு கடந்த ஜூலை 9-ம் தேதி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் ர் சித்தராமையாவின் காரை டிரைவர் வேகமாக ஓட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த 7 போக்குவரத்து விதிமீறல்களுக்கும் போக்குவரத்து போலீசார் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்திருந்தனர்.
தற்போது பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளுக்கு 50 சதவீத தள்ளுபடியில் அபராதம் செலுத்த போக்குவரத்து போலீசார் கால அவகாசம் வழங்கியுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் சித்தராமையா பயன்படுத்தும் காருக்கு விதிக்கப்பட்ட 7 விதிமீறல்களுக்கும் மொத்தம் ரூ.2,500 அபராதம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


