Idhayam Matrimony

ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த செங்கோட்டையன்

ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2025      தமிழகம்
Cenkotaiyan- 2025-09-05

Source: provided

சென்னை : அ.தி.மு.க. கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கிய நிலையில் தனக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கடந்த 5-ம் தேதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் 6-ம் தேதி கே.ஏ.செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் வகித்து வந்த அமைப்புச்செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகிய பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

கோபி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்த சிலரையும் நீக்கினார், இந்த நிலையில் கோபி சட்டமன்ற தொகுதியில் பதவி வகித்து வரும் ஒன்றிய, நகர, கிளை, கழக, பேரூர் கழக, வார்டு செயலாளர்கள் என சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் (செப்டம்பர் 06) நம்பியூர் பகுதியில் கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களுடைய கட்சி பதவியையும் ராஜினாமா செய்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். 

அதனைத் தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 07) கோபி அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சி பதவியை ராஜினாமா செய்து கட்சியின் பொதுச் செயலாளர் அவர்களுக்கு இரண்டாவது நாளாக கடிதம் அனுப்பி வருகின்றனர். இந்தநிலையில், கோபி செட்டி பாளையத்தில் செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் ஆதரவு தெரிவித்து வரும் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. அ.தி.மு.க.வின் எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்றும், இன்றும் தொடர்ந்து என்னை வந்து சந்திக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். நாளை முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்திக்கிறார் செங்கோட்டையன். தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து