கட்சி சின்னம் பொறித்த சட்டையுடன் சென்று வாக்கு செலுத்திய உதயநிதி தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார்

செவ்வாய்க்கிழமை, 6 ஏப்ரல் 2021      இந்தியா
Udayanidhi 2021 04 06

தி.மு.க.-வின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இவர் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தி.மு.க.-விற்கு வாக்குசேகரித்தார். 

உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. சின்னமான உதயசூரியன் பொறித்த சட்டையை அணிந்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது அவ்வாறு செய்தார். நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் அவருக்குரிய வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

அப்போது உதயசூரியன் பொறித்த சட்டை அணிந்திருந்தார். தேர்தல் விதிமுறைப்படி அவ்வாறு செய்யக்கூடாது. வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தொலைவில்தான் சின்னத்தை பயன்படுத்த வேண்டும். 

இதனால் அ.தி.மு.க.-வின் பாபு முருகவேல் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து