பஞ்சாபிலும் இரவு நேர ஊரடங்கு

புதன்கிழமை, 7 ஏப்ரல் 2021      இந்தியா
Curfew 2021 03 31

Source: provided

சண்டிகார் : இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி அரசுகள் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

மற்ற சில மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் பஞ்சாபில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 9 மணியில் இருந்து காலை ஐந்து மணி வரை மாநிலம் முழுவதும் வருகிற 30 -ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

மேலும், அரசு தொடர்பாக பொதுக்கூட்டத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச அரசு, சத்தீஸ்கர் மாநிலத்துடனான பொது போக்குவரத்திற்கு ஏப்ரல் 15 - ந் தேதி வரை தடைவிதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து