உமர் அப்துல்லா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

புதன்கிழமை, 7 ஏப்ரல் 2021      இந்தியா
Omar-Abdullah 2021 04 07

தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (ஸ்கிம்ஸ்) அவர் தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக்கொண்டார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று காலை எனது கரோனா தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக்கொண்டேன். எனக்கு தடுப்பூசி போட்டதற்காக ஸ்ரீநகர் ஸ்கிம்ஸில் உள்ள அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மகன் உமர் அப்துல்லா இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தந்தையின் உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருவதாகவும் செயற்கை சுவாசக் கருவி இன்றி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உமர் அப்துல்லா  தகவல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து