மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சிங்கூரில் பேரணி

புதன்கிழமை, 7 ஏப்ரல் 2021      இந்தியா
Amitsha 2021 03 24

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் நேற்று பேரணி நடைபெற்றது.மேற்கு வங்கத்தில் மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சிங்கூரில் தேர்தல் பேரணி நடைபெற்றது. நேற்று மட்டும் பா.ஜ.க. சார்பில் மேற்குவங்கத்தில் மூன்று பேரணிகள் நடைபெற்றன. சிங்கூரைத் தொடர்ந்து டோம்ஜூரிலும், ஹவுரா மத்தியாவிலும் பேரணி நடைபெற்றது. 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 10, 17, 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து