முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் ஒரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு: 'இந்திய மகளிர் ஹாக்கி' அணி இங்கிலாந்துடன் இன்று மோதல்

வியாழக்கிழமை, 5 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தது. இதேபோல இந்திய மகளிர் ஹாக்கி அணியும் வெண்கலப்பதக்கம் பெற்று சாதிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 போட்டியில் தோல்வி...

ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணி லீக் ஆட்டங்களில் தான் மோதிய முதல் 3 போட்டியில் தோல்வியை தழுவியது. நெதர்லாந்திடம் 1-5 என்ற கோல் கணக்கிலும், ஜெர்மனியிடம் 0-2 என்ற கணக்கிலும், இங்கிலாந்திடம் 1-4 என்ற கணக்கிலும் தோற்றது.

கால் இறுதிக்கு தகுதி...

பின்னர் இந்திய மகளிர் ஹாக்கி அணி சிறப்பாக ஆடி அயர்லாந்தை 1-0 என்ற கணக்கிலும், தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கணக்கிலும் வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி கால் இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

அரையிறுதியில் தோல்வி...

ஆனால் அரை இறுதியில் அர்ஜென்டினாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்று இறுதிப்போட்டிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தது. 3-வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை இன்று எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு போட்டித் தொடங்குகிறது.

புதிய வரலாறு படைக்குமா?

இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கல பதக்கம் பெற்று புதிய வரலாற்றை நிகழ்த்துமா என்ற ஆவல் இந்திய ரசிகர்களிடம் மேலோங்கி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து