முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு வெள்ளி, 3 வெண்கலம்: ஒலிம்பிக் பதக்க வரிசையில் இந்தியாவுக்கு 65-வது இடம்

வியாழக்கிழமை, 5 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: 32 தங்கத்துடன் சீனா முதலிடத்திலும், 27 தங்கத்துடன் அமெரிக்கா 2-வது இடத்திலும் உள்ள நிலையில், ஜப்பான் 3-வது இடத்தை பிடித்துள்ளது. 2 வெள்ளி, 3 வெண்கலம் உள்ளிட்ட மொத்தம் 5 பதக்கங்களுடன் தற்போது இந்தியா பதக்க வரிசையில் 65-வது இடத்தை பிடித்துள்ளது.

66-வது இடம்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியா ஒரு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. நான்கு பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 66-வது இடத்தை பிடித்திருந்தது.

முன்னேற்றம்...

மல்யுத்தம் போட்டியில் ரவிக்குமார் தாஹியா வெள்ளி வென்றால் இந்தியா மேலும் பல இடங்கள் முன்னேறும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அவர் வெள்ளி வென்றதன் மூலம் இந்தியா தற்போது 65-வது இடத்தை பிடித்துள்ளது.

சீனா முதலிடம்...

சீனா 32 தங்கம், 23 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. 27 தங்கம், 33 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா 2-வது இடத்தை பிடித்துள்ளது. போட்டியை நடத்தும் ஜப்பான் 21 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து