முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

“ஆனந்தம் விளையாடும் வீடு” படப்பிடிப்பு நிறைவு

வெள்ளிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

கௌதம் கார்த்திக் இயக்குநர் சேரன் மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு”. இது குடும்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. நந்தா பெரியசாமி இயக்க, ஶ்ரீ வாரி ஃபிலிம் P.ரங்கநாதன் இப்படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்.

இது குறித்து படத்தின்  தயாரிப்பாளர் P. ரங்கநாதன் கூறியதாவது. " ஆனந்தம் விளையாடும் வீடு " படம், பல ஆண்டுகளுக்கு பிறகு,  எனது வாழ்வில் எனக்கு மிகவும் நெருக்கமான, சிறப்பான படமாக அமைந்ததுள்ளது.

இந்த படத்தில் 40 க்கும் மேற்பட்ட நடசத்திர பட்டாளத்தை ஒன்றிணைத்து, படத்தை உருவாக்க, பெரிதும் உதவிய இயக்குநர் நந்தா பெரியசாமிக்கு நான் பெரிதும் கடமை பட்டுள்ளேன் என்றார். படத்துக்கு சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். 

தற்போது முழு கட்டுமானப் பணியும் முடிந்து கிரகபிரவேசத்துக்கு தயாராகி வருகிறது இந்த “ஆனந்தம் விளையாடும் வீடு”

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து