கேரளாவில் அக்ஸ்ட் 4-ம் தேதி கல்லூரிகள் திறப்பு

Kerala-College 2021 09 08

கேரள மாநிலத்தில் கொரோனா மற்றும் நிபா வைரஸ் தொற்று அச்சத்திற்கு மத்தியில் வரும் அக்டோபர் -4 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இந்தநிலையில் தற்போது படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார். 

மேலும் வரும் அக்டோபர் 4-ம் தேதி முதல் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்படும் என்றும் கூடிய விரைவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில உயர்கல்வித் துறை மற்றும் சமூக நீதித்துறை மந்திரி ஆர். பிந்து,

வருகிற அக்டோபர் -4 ஆம் தேதியில் கல்லூரிகளைத் திறக்க முடிவெடுத்துள்ளோம். சுழற்சி முறையில் வகுப்புகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். இருப்பினும் வருகிற செப்டம்பர்-10 ஆம் தேதி கல்லூரி முதல்வர்களுடன் அலோசனையில் ஈடுபட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பள்ளிகள் கல்லூரிகள் திறப்பதற்கு முன்பாக ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் தடுப்பூசி செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து