Idhayam Matrimony

விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டியில் பக்தர்களின்றி நடந்த தீர்த்தவாரி உற்சவம்

வெள்ளிக்கிழமை, 10 செப்டம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவையொட்டி நேற்று காலை கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. கொரோனா தடை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோயில் வெறிச்சோடியது. 

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தி பெருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 2-ம் தேதியில் இருந்து 8-ம் தேதி வரை தினந்தோறும் காலை சுவாமி வெள்ளி கேடகத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு நாள் இரவிலும் சுவாமி மூஷிக, ரிஷப, யானை உள்ளிட்ட வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

கொரோனாவால் கடந்த 6-ம் தேதி அசுரனை வதம் செய்யும் கஜமுக சூரசம்ஹாரம், நேற்று முன்தினம் நடைபெற வேண்டிய தேரோட்டம் நடைபெறவில்லை. நேற்று மூலவர் கற்பக விநாயகர் தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து காலை 10 மணியளவில் உற்சவ விநாயகர் தங்க மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் கோயில் குளத்தின் முன்பு எழுந்தருளினர். பின்னர் குள படிக்கட்டில் அங்குசதேவருக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதினர். பின்னர் சிவாச்சாரியார் ஒருவர் அங்குசதேவருடன் கோயில் குளத்தில் மூன்று முறை மூழ்கி எழுந்து விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

தொடர்ந்து மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு 18 படி அரிசியால் செய்யப்பட்ட ராட்சத கொளுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. 

 

விநாயகர் சதுர்த்தியன்று தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக அரசு வெளிட்டுள்ள கட்டுப்பாடு விதிமுறைகளின்படி தடை உள்ளதால், பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி உற்சவம் வரை பக்தர்கள் இன்றி நடந்தன. இதனால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து