முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் ரத்தானது ஏன் ? பி.சி.சி.ஐ விளக்கம்

வெள்ளிக்கிழமை, 10 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை: இந்திய அணியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பே 5-வது டெஸ்ட்டை ரத்துசெய்யும் சூழ்நிலைக்கு தள்ளியதாக பி.சி.சி.ஐ விளக்கம் கொடுத்திருக்கிறது.

கொரோனாவால்...

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 10 முதல் 14-ம் தேதிவரை இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பி.சி.சி.ஐ அறிக்கை...

இதுகுறித்து பி.சி.சி.ஐ அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில்இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியமும் இணைந்து மான்செஸ்டரில் நடைபெறவிருந்த 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யும் முடிவை எடுத்திருப்பதாக பி.சி.சி.ஐயின் செயலாளர் ஜெய் ஷா அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

மீண்டும் நடத்த...

டெஸ்ட் போட்டியை நடத்த இங்கிலாந்து வாரியத்திடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பி.சி.சி.ஐ தெரிவித்திருக்கிறது. மேலும் பி.சி.சி.ஐ மற்றும் இசிபியும் இணைந்து ரத்து செய்யப்பட்ட போட்டியை மீண்டும் நடத்த முன்வந்துள்ளதாகவும்ஆனால் எப்போது என முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.

பி.சி.சி.ஐ வருத்தம்...

வீரர்களின் பாதுகாப்பை பி.சி.சி.ஐ எப்போதும் கருத்தில்கொள்வதாகவும்அதில் ஒருபோதும் சமரசம் செய்யமாட்டோம் எனவும் தெரிவித்திருக்கிறது. மேலும் தங்கள் சூழ்நிலையை புரிந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு தனது நன்றிகளையும்ரசிகர்களுக்கு ஏமாற்றத்திற்கு வருத்தங்களையும் பி.சி.சி.ஐ தெரிவித்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து