மேட்டூர் அருகே பரிதாப சம்பவம் நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவன் தற்கொலை

Neet 2021 07 18

Source: provided

மேட்டூர்: மேட்டூர் அருகே நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் பி.வி.சி. பைப் கம்பெனி ஊழியராக வேலை செய்கிறார். இவரது இளையமகன் தனுஷ்(20). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதினார். இருமுறையும் தோல்வி அடைந்ததால் மூன்றாவது முறை படித்துக் கொண்டிருந்தார்.

நேற்று மேட்டூரை அடுத்த மேச்சேரி காவிரி பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கவிருந்த நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தனுஷ் நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் விசாரித்து வருகின்றனர்

மாணவர் தனுஷ் உடலுக்கு நேற்று  மதியம் 12:30 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி மாலை போட்டு அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து