செவ்வாயில் 2 பாறை மாதிரிகளை சேகரித்த 'பெர்சவரென்ஸ் ரோவர்'

Mars-Rock 2021 09 13

Source: provided

வாஷிங்டன் : கடந்த செப்டம்பர் 6-ம் தேதி நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் தன் முதல் பாறை மாதிரிகளைச் சேகரித்தது. அடுத்த சில நாட்களில் மீண்டும் 2-வது முறையாக பாறை மாதிரிகளைச் சேகரித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

துல்லியமாக... 

இலக்கு வைக்கப்பட்டிருக்கும் பாறை மாதிரிகள் எரிமலை குழம்புகளால் தோன்றியதாக இருக்கலாம் என்றும், எனவே அதை துல்லியமாக கணக்கிட முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பாறை மாதிரிகளில் உப்பு இருக்கலாம் என்றும், உப்பு இருந்தால் அங்கு நீர் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும், உயிரினங்களும் வாழ்ந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

உயிரினங்கள்... 

செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ க்ரேடர் என்கிற குறிப்பிட்ட பகுதிக்கு பெர்சவரன்ஸ் ரோவர் அனுப்பப்பட்டது. காரணம் அங்கு 100 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ரோவர் சேகரித்திருக்கும் பாறை மாதிரிகளை வைத்து நீர் நிலை சூழல்கள் எப்போது இருந்தன என குறிப்பிட்டு ஒரு காலத்தை வரையறுக்க முடியும்.

பாறைகளுக்கு...

தற்போது செவ்வாயில் ரோவரால் சேகரிக்கப்பட்டு இருக்கும் இரு மாதிரிகளுக்கு மான்ட்டெனைர் (Montdenier - செப் 6 சேகரிக்கப்பட்டது) மற்றும் மான்டக்னக் (Montagnac செப் 8 சேகரிக்கப்பட்டது) என பெயரிடப்பட்டிருக்கிறது என நாசாவின் செவ்வாய் பாறை மாதிரிகள் பிரிவின் விஞ்ஞானி மீனாட்சி வாதவா கூறியுள்ளார்.

முக்கிய சாதனை...

"பெர்சவரன்ஸ் ரோவர் சேகரித்திருக்கும் பாறை மாதிரிகளைக் குறித்து மிகைப்படுத்தத் தேவை இல்லை. வேற்று கிரகத்தில் சேகரிக்கப்பட்ட முதல் பாறை மாதிரிகள் அவை. அது உண்மையிலேயே வரலாற்றின் மிக முக்கிய சாதனை." என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து