பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

Stalin 2020 07-18

பிரதமர் மோடி நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் 71-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. 

பிரதமர் மோடிக்குப் பல்வேறு தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக, ஸ்டாலின் நேற்று தன் ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து