முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேர வளையம் திரைப்படம் ஜாங்கோ

சனிக்கிழமை, 18 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய படம் தான் ஜாங்கோ என்று கூறுகிறார் இயக்குனர் மனோ கார்த்திகேயன். மேலும் அவர் கூறுகையில், "தமிழ் திரையுலகில் டைம் டிராவல் அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன,

ஆனால் டைம் லூப் அடிப்படையிலான முதல் திரைப்படமாக ஜாங்கோ இருக்கும். குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழும், மேலும் அவை வித்தியாசமான திரைக்கதையுடன் சுவாரசியமான முறையில் காட்டப்படும்," என்றார்.

இந்த படத்தில் அறிமுக நடிகர் சதீஷ்குமார் மற்றும் டிக்டாக் புகழ் மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிதா சம்பத், ஹரீஷ் பேரடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் டேனியல் அன் போப் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ள இப் படத்திற்கு இசை ஜிப்ரான். ஹரிச்சரண பாடிய 'அனலே அனலே' என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு, வரவேற்பை நல்ல பெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து