''தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்ய முடியாது''- திருமாவளவன் பேச்சு

Thirumavalavan 2021 09 19

Source: provided

சென்னை: தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது  என  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் இனி பா.ஜ.க.வின் ஆட்சி தான் என்ற அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய திருமாவளவன் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முன்னதாக, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘பிரதமராக மோடி இருக்கும்போதே தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் எனவும்  தமிழகத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த முதலமைச்சர் அமரப்போவதை பிரதமர் மோடியே பார்க்கத்தான் போகிறார் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை”  எனவும் பேசியிருந்தார். இதற்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். அப்போது கூறிய அவர் தமிழகத்தில் பா.ஜ.க ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து