முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ச்சியாக 6 தோல்விகள்: நெருக்கடியில் கேப்டன் கோலி

செவ்வாய்க்கிழமை, 21 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

கடந்த வருடம் ஆர்சிபி அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றாலும் கடைசிக்கட்டத்தில் மோசமாக விளையாடித்தான் போட்டியிலிருந்து வெளியேறியது.

தொடர் தோல்வி...

முதல் 10 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி, லீக் சுற்றில் கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோற்றது. நெட் ரன்ரேட் அடிப்படையில் கேகேஆர் அணியைப் பின்னுக்குத் தள்ளி 4-ம் இடம் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது. எனினும் எலிமினேட்டர் சுற்றில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது. இப்படிக் கடந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோல்வியடைந்த ஆர்சிபி அணி திங்கட்கிழமை போட்டியிலும் தோற்றுள்ளது.

முதலில் பேட்டிங்... 

6 தோல்விகளிலும் உள்ள ஓர் ஒற்றுமை, ஆர்சிபி அணி இந்த 6 ஆட்டங்களிலும் முதலில் பேட்டிங் செய்துள்ளது. அதைவிடவும் அபுதாபியில் முதலில் பேட்டிங் செய்த 5 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. ஆனால் இதே மைதானத்தில் 2 முறை இலக்கை விரட்டியபோது வெற்றி அடைந்துள்ளது. 

நெருக்கடியில் கோலி... 

 

ஆர்சிபி அணியின் குறைகளைக் களைந்து அணியை மீண்டும் வெற்றிப்பாதையில் பயணிக்க வைக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார் விராட் கோலி. அபுதாபியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூா் 19 ஓவா்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து