எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மொத்த விற்பனை செய்யும் கடைப்பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்கள் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் போது மொத்தமாக விற்பனை செய்தல் கூடாது எனறும், ஒரு தனி நபருக்கு அனுமதிக்கப்பட்ட அளவுகளிலேயே விற்பனை செய்ய வேண்டுமென பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களின் ஆய்வுக் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து, ஐகோர்ட் மதுரை கிளையில் குற்றவியல் வழக்கு ஒன்றில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான சில்லறை விற்பனை கடைகளிலிருந்து மொத்தமாக மதுபானங்களை வாங்கி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுபான விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
எனவே, அனைத்து மாவட்ட மேலாளர்களும், மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலிருந்து மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்தல் கூடாது என்பதை தத்தம் மாவட்ட கடைப்பணியாளர்களின் ஆய்வுக்கூட்டம் நடத்தி, இப்பொருள் குறித்து விளக்கமாக தெரிவித்து அனைத்து கடைப்பணியாளர்களிடமும் சான்றொப்பம் பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு மொத்தமாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைப்பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதனை அனைத்து மாவட்ட மேலாளர்களும் தவறாது கண்காணித்து எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் விற்பனை செய்திட அனைத்து கடைபணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
உலக தடகள போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி
24 Aug 2025சென்னை : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி பெற்றார்.
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு ரகானே வாழ்த்து
24 Aug 2025புதுடெல்லி : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு ரகானே வாழ்த்து தெரிவத்தார்.
-
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி
24 Aug 2025செயிண்ட் லூசியா : செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.
-
ஒருநாள் கிரிக்கெட்: 47 பந்துகளில் சதம் அடித்து கேமரூன் கிரீன் சாதனை
24 Aug 2025மெக்காய் : ஒருநாள் கிரிக்கெட்டில் 47 பந்துகளில் சதம் அடித்து கேமரூன் கிரீன் சாதனை படைத்தார்.
-
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து புஜாரா ஓய்வு
24 Aug 2025மும்பை : சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து பிஜாரா ஓய்வு செய்வதாக அறிவித்தார்.
-
ஆசிய கோப்பை: பும்ரா போட்டிகளில் விளையாட மாட்டார் - வில்லியர்ஸ்
24 Aug 2025கேப்டவுன் : ஆசிய கோப்பை போட்டிகளில் பும்ரா அணைத்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று வில்லியர்ஸ் கூறினார்.