எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவை, தொண்டாமுத்தூரில் உள்ள நிலத்திற்கு செல்லும் பாதையை மறித்த விவகாரம் தொடர்பாக பிரித்வி ராஜ்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பிரபல பார்முலா கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது தொண்டாமுத்தூர் போலீஸார் ஐ.பி.சி 339 என்ற பிரிவின் கீழ் (முறையற்ற தடுப்பை ஏற்படுத்துதல்) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நரேன் கார்த்திகேயன் நிறுவனத்தில் பணிபுரியும் கோகுல் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பிரித்வி ராஜ்குமார் மீதும் முறையற்ற தடுப்பை ஏற்படுத்தியதாக காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இரு தரப்பினர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் இரு தரப்பினர் மீதும் தொண்டாமுத்தூர் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாக்.கிற்கு ஆதரவாக கவாஜா குரல்
பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடக்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியது நியூசிலாந்து அணி. இந்த சம்பவம் நடந்து சில நாட்களே கடந்த நிலையில், இரு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்த இங்கிலாந்து அணியும் தொடரிலிருந்து விலகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கவாஜா கூறுகையில், கிரிக்கெட் விளையாட பாதுகாப்பான நாடு என்று பாகிஸ்தான் மீண்டும் நிரூபித்துள்ளது. ஆனாலும் அங்கு விளையாட மாட்டோம் என்று சொல்லும் வீரர்கள், இந்தியாவில் விளையாட மாட்டோம் என்று சொல்ல மாட்டார்கள். காரணம் பணம் என தெரிவித்துள்ளார்.
2-வது ஒருநாள்: மந்தனா 86 ரன்கள்
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20, ஒரு டெஸ்ட் என மூன்று தொடர்களில் பங்கேற்கிறது இந்திய மகளிர் அணி. முதல் ஒருநாள் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்தது. 2-வது ஒருநாள் ஆட்டம், மேக்கேவில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஷஃபாலியும் மந்தனாவும் இந்திய அணிக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். 11 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்தார்கள். ஷஃபாலி 22 ரன்களில் ஆட்டமிழந்தார். சமீபகாலமாக ரன்கள் எடுக்கத் திணறி வரும் மந்தனா, நேற்று சிறப்பாக விளையாடி 94 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். பவுண்டரிகளுடன் 50 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது.
சொந்த ஊருக்கு திரும்பிய ரூதர்போர்ட்
ஐ.பி.எல் 2021 ஏலத்தில் ரூதர்போர்டை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல் 2021 போட்டியிலிருந்து இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ விலகிய பிறகு ரூதர்போர்டைத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி.
இந்நிலையில் ரூதர்போர்டின் தந்தை இறந்துவிட்டதால் கொரோனா தடுப்புப் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு ரூதர்போர்ட் செல்வதாக சன்ரைசர்ஸ் அணி அறிவித்துள்ளது. 23 வயது ரூதர்போர்ட், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 6 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
ஒடிஸாவில் உலகக் கோப்பை ஹாக்கி
எஃப்ஐஹெச் ஆடவா் ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி ஒடிஸாவில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில முதல்வா் நவீன் பட்நாயக் முறைப்படி அறிவித்துள்ளார். இந்தப் போட்டியை நடத்துவதற்காக ஒடிஸா, உத்தர பிரதேச மாநிலங்கள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இந்த முறை அந்த வாய்ப்பு ஒடிஸாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 2016-இல் நடைபெற்ற கடந்த சீசனில் இந்தியா சாம்பியனாகியிருந்தது. தற்போது எதிா்வரும் உலகக் கோப்பை போட்டி நவம்பா் 24 முதல் டிசம்பா் 5 வரை ஒடிஸாவின் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் 16 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
உலக தடகள போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி
24 Aug 2025சென்னை : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி பெற்றார்.
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு ரகானே வாழ்த்து
24 Aug 2025புதுடெல்லி : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு ரகானே வாழ்த்து தெரிவத்தார்.
-
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி
24 Aug 2025செயிண்ட் லூசியா : செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.
-
ஒருநாள் கிரிக்கெட்: 47 பந்துகளில் சதம் அடித்து கேமரூன் கிரீன் சாதனை
24 Aug 2025மெக்காய் : ஒருநாள் கிரிக்கெட்டில் 47 பந்துகளில் சதம் அடித்து கேமரூன் கிரீன் சாதனை படைத்தார்.
-
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து புஜாரா ஓய்வு
24 Aug 2025மும்பை : சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து பிஜாரா ஓய்வு செய்வதாக அறிவித்தார்.
-
ஆசிய கோப்பை: பும்ரா போட்டிகளில் விளையாட மாட்டார் - வில்லியர்ஸ்
24 Aug 2025கேப்டவுன் : ஆசிய கோப்பை போட்டிகளில் பும்ரா அணைத்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று வில்லியர்ஸ் கூறினார்.