முக்கிய செய்திகள்

நண்பேண்டா: டோனி - கோலிக்கு ரசிகர்கள் புகழாரம்

சனிக்கிழமை, 25 செப்டம்பர் 2021      விளையாட்டு
Dhoni-Kohli 2021 09 25

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவினாலும் கோலி, டோனியிடம் கொண்ட நட்பை கண்டு ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். 

சென்னை வெற்றி...

சார்ஜாவில் நடந்த ஐ.பி.எல். 35-வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிதான இலக்கை சிரமம் இல்லாமல் அடைந்தது சி.எஸ்.கே. சி.எஸ்.கே 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ஆர்.சி.பி 3-ம் இடத்தில் உள்ளது. 

உரையாடல்...

இந்நிலையில் ஆட்டம் சற்று தாமதமாகத் தொடங்கியது. இதனால் கிடைத்த அவகாசத்தில் மைதானத்தில் இருந்த டோனியுடன் உரையாடினார் கோலி. டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டிருப்பதால் அதுபற்றி இருவரும் ஆலோசனை செய்திருப்பார்கள் என்று அறியப்படுகிறது. 

இணையத்தில்... 

 

டோனியுடனான நட்பை வெளிப்படுத்தும் விதமாக கோலி அவரிடம் உரையாடியதும் டோனிக்கு மரியாதை அளித்ததும் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும், போட்டி முடிந்த பிறகு விராட் கோலி பின்புறம் இருந்து டோனியை திடீரென கட்டியணைத்த தூக்கிய புகைப்படங்கள், டோனி - கோலி பேசிக்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், விடியோக்களைச் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து