முக்கிய செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் மொயீன் அலி

moeen-ali

Source: provided

அபுதாபி: இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கவுண்டிக் கிரிக்கெட், ஐ.பி.எல். போன்ற வெளிநாட்டு 20 ஓவர் தொடரில் தொடர்ந்து விளையாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில்...

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலி. ஆல்ரவுண்டரான அவர் தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் செnனை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இந்த நிலையில் மொயின் அலி, தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

கேப்டனிடம் தகவல்...

மேலும் கவுண்டிக் கிரிக்கெட், ஐ.பி.எல். போன்ற வெளிநாட்டு 20 ஓவர் தொடரிலும் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை இங்கிலாந்து அணி பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட் மற்றும் டெஸ்ட் அணி கேப்டன் ஜோரூட் ஆகியோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

64 டெஸ்ட்டில்... 

34 வயதான மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 2014-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இதுவரை 64 டெஸ்ட்டில் விளையாடி உள்ளார். 2,914 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதம், 14 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 155 ரன் எடுத்துள்ளார். 195 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். வரும் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் ஆசஷ் தொடர் ஆகியவற்றுக்காக நீண்ட நாட்கள் சுற்றுப்பயணத்தில் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்ததாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து