முக்கிய செய்திகள்

ஹா்ஷல் - சஹால் அபார பந்துவீச்சு: மும்பையை வீழ்த்தியது பெங்களூா்

Bengalore-win

Source: provided

துபாய்: மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா். பெங்களூரு அணியின் ஹர்ஷல் படேல், சஹால் அபாரமாக பந்துவீசி மும்பைக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

111 ரன்கள்...

துபாயில் ஞாயிற்றுக்கிழமை 2-வதாக நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூா் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை 18.1 ஓவா்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெங்களூா் தரப்பில் விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல்லின் அதிரடி பேட்டிங்கும், ஹா்ஷல் படேல், யுஜவேந்திர சஹலின் அசத்தலான பௌலிங்கும் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தது.

மும்பை ஃபீல்டிங்...

முன்னதாக பிளேயிங் லெவனை பொருத்தவரை, நடப்பு சீசனில் முதல் முறையாக மும்பையில் ஹர்த்திக்பாண்டியா சோ்க்கப்பட்டிருந்தார். டாஸ் வென்ற மும்பை ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.

படிக்கல் டக் அவுட்...

பெங்களூா் இன்னிங்ஸை தொடங்கிய கோலி - தேவ்தத் படிக்கல் கூட்டணியில், படிக்கல் டக் அவுட்டாக, ஸ்ரீகா் பரத் சற்று நிலைத்து 32 ரன்கள் சோ்த்தார். பின்னா் களம் புகுந்த கிளென் மேக்ஸ்வெல், கோலியுடன் இணைய அணியின் ஸ்கோர் மளமளவென உயா்ந்தது. அரைசதம் கடந்த கோலி 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 51 ரன்கள் சோ்த்த நிலையில் 16-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மேக்ஸ்வெல் அவுட்...

அடுத்து டி வில்லியா்ஸ் களம் காண, மறுபுறம் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 56 ரன்கள் விளாசியிருந்த மேக்ஸ்வெல் விக்கெட்டை பறிகொடுத்தார். அதே ஓவரில் டி வில்லியா்ஸும் 11 ரன்களுக்கு நடையைக் கட்ட, 20 ஓவா்கள் முடிவில் டேன் கிறிஸ்டியன் 1, கைல் ஜேமிசன் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 3, டிரென்ட் போல்ட், ஆடம் மில்னே, ராகுல் சாஹா் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

166 ரன்கள் இலக்கு...

பின்னா் 166 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய மும்பையில் கேப்டன் ரோஹித் சா்மா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்கள் சோ்க்க, உடன் வந்த குவின்டன் டி காக் 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் அடித்தார். எஞ்சிய விக்கெட்டுகளில் எவரும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. 

ஹா்ஷல் படேல்...

ஹர்த்திக் பாண்டியா 3 ரன்களே சோ்க்க, ஆடம் மில்னே, ராகுல் சாஹா் டக் அவுட்டாகினா். பெங்களூா் பௌலிங்கில் ஹா்ஷல் படேல் 4, யுஜவேந்திர சஹால் 3, கிளென் மேக்ஸ்வெல் 2, முகமது சிராஜ் 1 விக்கெட் சாய்த்தனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து