முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பு ஐ.பி.எல் தொடரின் கடைசி 2 லீக் ஆட்டங்களும் ஒரே நேரத்தில் நடைபெறும்: பி.சி.சி.ஐ

புதன்கிழமை, 29 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல் 2021 போட்டியின் கடைசி லீக் ஆட்டங்கள் அக்டோபர் 8-ம் தேதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்றன. அன்றைய தினம் நடைபெறும் மதிய ஆட்டத்தில் மும்பை - சன்ரைசர்ஸ் அணிகளும் இரவு ஆட்டத்தில் ஆர்சிபி - பெங்களூர் அணிகள் மோதுவதாக இருந்தன. இதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

புதிய முயற்சி...

மும்பை - சன்ரைசர்ஸ், ஆர்சிபி - பெங்களூர் ஆகிய இரு ஆட்டங்களும் இந்திய நேரம் இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் எனத் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டியில் இதுவரை ஒரே நேரத்தில் இரு ஆட்டங்கள் நடைபெற்றது கிடையாது. பிறகு ஏன் இந்தப் புது முயற்சியை பி.சி.சி.ஐ மேற்கொண்டுள்ளது.

ஸ்டார் தொலைக்காட்சி... 

ஐ.பி.எல் போட்டியில் இந்திய நேரப்படி மதியம் ஆரம்பிக்கும் ஆட்டங்களுக்கு ரேட்டிங் அவ்வளவாகக் கிடைப்பதில்லை என ஸ்டார் தொலைக்காட்சி பி.சி.சி.ஐயிடம் புகார் தெரிவித்துள்ளது. இதனால் சோதனை முயற்சியாக ஒரே நேரத்தில் இரு ஐ.பி.எல் ஆட்டங்களை நடத்திப் பார்க்க ஸ்டார் தொலைக்காட்சி ஆர்வம் காட்டியதாகவும் இதற்கு பி.சி.சி.ஐ சம்மதித்ததாகவும் சொல்லப்படுகிறது. ரேட்டிங் காரணமாகவே இரு கடைசி லீக் ஆட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளன. 

பி.சி.சி.ஐ திட்டம்...

இதில் கிடைக்கும் ரேட்டிங்கைப் பொறுத்து இதுபோல ஒரே நேரத்தில் இரு ஆட்டங்களைத் தொடர்ந்து நடத்தவும் பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது. கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெறும் அக்டோபர் 8-ம் தேதி மும்பை - ஐதராபாத் இடையேயான போட்டியும், பெங்களூரு - டெல்லி இடையேயான போட்டியும் மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் தொடங்கும் என பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். 

குறைந்த நாள்களில்... 

 

மேலும் அடுத்த வருட ஐ.பி.எல் போட்டியில் புதிதாகச் சேர்க்கப்படும் 2 அணிகளுடன் 10 அணிகள் போட்டியிடவுள்ளன. ஒரே நேரத்தில் இரு ஆட்டங்கள் நடைபெற்றால் குறைந்த நாள்களில் பல ஆட்டங்களை நடத்தவும் வாய்ப்புள்ளது என்பதால் ஸ்டார் தொலைக்காட்சியின் கோரிக்கையை பி.சி.சி.ஐ ஏற்றுக்கொண்டு இந்த மாற்றத்தைச் செய்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து