முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடு முதல் வீதிவரை அனைத்தும் தூய்மையாக காட்சியளிக்கின்றன : பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 1 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

தூய்மை இந்தியா திட்டத்தின் 2.0-வை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடக்கி வைத்தார். பிறகு பேசிய அவர் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தால் வீடு முதல் வீதிவரை அனைத்தும் தூய்மையாக காட்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றபோது மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் தருணத்தில் தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று கூறி, 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் நாள் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி, குப்பை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இதனால் மக்கள் அனைவரும் தங்களுடைய பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.மேலும், இது மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும் என்றும் கூறி, இதை பிரபலப்படுத்த நட்சத்திரங்களை தூதர்களாக நியமித்தார். 

இந்நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் 2.0-வை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடக்கி வைத்தார். மக்கள் தொகை அதிகம் உள்ள பெருநகரங்களில் சுத்தமான குடிநீர் மற்றும் காற்றை சுவாசிக்க இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது. நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல மேற்கண்ட இந்த திட்டங்கள் உதவும். மாசு படிந்த கருமை நிற கழிவுநீரை இல்லாமல் செய்ய இந்த திட்டங்கள் துணைபுரியும். மேலும் நகர்ப்புறங்களில் கழிவுநீர் பாதையை அமைத்து அவை வெளியேற ஏற்ற வழிகளை அமைக்க இந்த திட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது., குப்பையில்லா நகரங்களாக மாற்றுவதே தூய்மை இந்தியா-2 திட்டத்தின் நோக்கம். குப்பைகளை கீழே வீசக்கூடாது என குழந்தைகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். குப்பைகளை பிரித்து வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தூய்மை திட்டங்களில் சிறப்பாக பணியாற்றியதன் காரணமாகவே குஜராத்திற்கு தனி அடையாளம் கிடைத்தது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தால் வீடு முதல் வீதிவரை அனைத்தும் தூய்மையாக காட்சியளிக்கின்றன என தெரிவித்தார்.

 

பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ள தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை வரவேற்கிறேன் என தூய்மை இந்திய 2.0 திட்ட தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளியில் தெரிவித்தார். வேகமாக நடந்து வரும் நகரமயமாக்களை சமாளித்திட தூய்மை இந்தியா திட்டம் அவசியம். தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாகவும், சிறப்பாகவும் பிரதமர் செயல்படுத்திட வேண்டும். நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. நகர்ப்புறங்களில் கழிப்பிட வசதி, திட்டக்கழிவு மேலாண்மை திட்டஞ்களை பெருமளவு மேம்படுத்தியுள்ளளோம் எனவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து