முக்கிய செய்திகள்

இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டியது: ராஜஸ்தானில் ஒரு லிட்டர் 114-க்கு விற்பனை

petroal-2021-09-30

Source: provided

கங்கா : ராஜஸ்தான் மாநிலம், கங்கா நகரில் பெட்ரோல் ஒரு லிட்டா் ரூ.113.73-க்கும், டீசல் விலை ரூ.103.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை மீண்டும் உயா்த்தப்பட்டதால் நாடு முழுவதும் எரிபொருள் விலை இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ளது.பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 30 காசுகளும் வெள்ளிக்கிழமை உயா்த்தப்பட்டது. 

இதனால் புதுடெல்லியில் பெட்ரோல் விலை ரூ.101.89-ஆகவும், மும்பையில் ரூ.107.75-ஆகவும் உயா்ந்துள்ளது. இதேபோல், புதுடெல்லியில் டீசல் விலை ரூ.90.17-ஆகவும், மும்பையில் ரூ.97.84-ஆகவும் அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிஸா, ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ளது.

நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலம், கங்கா நகரில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. அங்கு உள்ளூா் வரி விதிப்பு காரணமாக, ஒரு லிட்டா் ரூ.113.73-க்கும், டீசல் விலை ரூ.103.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் டீசல் விலை 6 முறை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.55 வரை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் விலை 3 முறை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் வரை அதிகரித்துள்ளது.

சா்வதேச சந்தையில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை 78.64 டாலராக அதிகரித்துள்ளது. இதனால் அரசின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி வருகின்றன, என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து