முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் - 3 பேர் பலி

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      உலகம்
Indonesia 2021 10 16

Source: provided

டென்பசார் : பாலியின் வடகிழக்கில் உள்ள சிங்கராஜா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் நேற்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. துறைமுக நகரமான பாலியின் வடகிழக்கில் உள்ள சிங்கராஜா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. அதிகாலையில் தூங்கி கொண்டிஹிந்த மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததும் வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியே வந்தனர். நிலநடுக்கத்தால் ஹில்லி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். ட்ருன்யான் மற்றும் கிந்தாமணி கிராமங்களில் வீடுகள், அரசு கட்டிடங்கள் இடிந்தன. கரங்காசெம் பகுதியில் வீடு இடிந்ததில் 3 வயது சிறுமி உயிரிழந்தாள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து