எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
போபால் : மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாநில இடைத்தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
புர்கான்பூரில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி தற்போது நிலையில்லாத கட்சியாக இருக்கிறது. அந்த கட்சிக்கு யார் தலைவர் என்றே தெரியவில்லை.
சோனியா காந்தியை தற்காலிக தலைவராக நியமித்தார்கள். ஆனால் அவர் செயல்படாமல் இருக்கிறார். ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். கட்சியில் எந்த பதவியும் அவருக்கு இல்லை.
ஆனால் முதல்வர்களை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளையும் அவர்தான் எடுக்கிறார். பஞ்சாபில் முதல்- மந்திரி அம்ரீந்தர் சிங் சுமூகமாக ஆட்சியை நடத்தி வந்தார்.
திடீரென அவரை மாற்றிவிட்டார்கள். சித்து தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை கட்சியில் வற்புறுத்தி பிடித்து வைத்து இருக்கிறார்கள். ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் இதே பிரச்சினை இருக்கிறது. ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ்பாகலுக்கும், தியோ சிங்குக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் கமல்நாத்தை மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை. அவர் தனது மகனை இளைஞர் காங்கிரஸ் தலைவராக்கி தன்னை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்.
மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு சர்க்கஸ் கூடாரம் போல இருக்கிறது. யார், யார் எப்படி செயல்படுகிறார்கள் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை.
உலகத்தில் எங்காவது தலைவர் இல்லாத கட்சி உண்டா? ஆனால் காங்கிரஸ் கட்சி மட்டும்தான் தலைவர் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா வெளியிட்டுள்ள செய்தியில் நடந்து முடிந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் குடும்ப கூட்டமாக நடந்து முடிந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |