முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலக கோப்பை: வங்கதேசத்திடம் தோல்வியை தழுவிய பப்புவா நியூ கினியா

வியாழக்கிழமை, 21 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அல் அமீரத்: டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெறும் 97 ரன்களுக்கு சுருண்ட பப்புவா நியூ கினியா வங்கதேசத்திடம் தோல்வியை தழுவியது.

181 ரன்கள்...

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் முதல் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய வங்காளதேச அணி டி-20களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் மஹ்முதுல்லா 50 ரன்கள் சேர்த்தார். ஷாகிப் அல் ஹசன் 46 ரன்கள், லித்தன் தாஸ் 29 ரன்கள் சேர்த்தனர்.

ஆரம்பம் முதல்...

இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி, துவக்கம் முதலே வங்காளதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 29 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

97 ரன்களில்... 

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், கிப்லின் டோரிகா ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடி அரை சதத்தை நெருங்கினார். எனினும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பப்புவா நியூ கினியா அணி 97 ரன்களில் சுருண்டது.  கிப்லின் டோரிகா 34 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 46 ரன்கள் சேர்த்தார்.  வங்காளதேசம் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து