முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விபத்து: 2 அதிகாரிகளை நீக்கியது அமெரிக்க கடற்படை

வெள்ளிக்கிழமை, 5 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

அடையாளம் தெரியாத பொருள் மோதியதில் அனுசக்தி நீர் மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து அமெரிக்க கடற்படை விசாரணை நடத்தி வந்த நிலையில், 2 உயர் அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அணு ஆயுத திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பலான யூ.எஸ்.எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் கடந்த மாதம் 2-ம் தேதி தென்சீனக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத பொருள் மோதி சேதமடைந்துள்ளது. இதில் மாலுமிகள் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்த தகவலை 5 நாட்களுக்கு பிறகே கடற்படை வெளியிட்டது.  விபத்தில் கப்பலுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும்,  அமெரிக்க பிராந்தியமான குவாமை நோக்கி கப்பல் பயணிப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். 

இந்த விபத்து குறித்து அமெரிக்க கடற்படை விசாரணை நடத்தி வந்த நிலையில், 2 உயர் அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  தளபதி மற்றும் நிர்வாக அதிகாரிக்கு ஆலோசகராக பணியாற்றிய ஒரு மாலுமியும் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.  யுஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கிக் கப்பல் எப்படி விபத்தில் சிக்கியது? கடற்பகுதியில் அல்லது நீருக்கடியில் உள்ள மலை மீது மோதியதா? மற்றும் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான விவரத்தை கடற்படை பகிரங்கமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!