Idhayam Matrimony

தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம்: வாடிகனில் அடுத்த ஆண்டு மே, 15-ம் தேதி போப் வழங்குகிறார்

வியாழக்கிழமை, 11 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

குமரி மாவட்டத்தை சேர்ந்த முக்திப்பேறு பெற்ற மறைசாட்சி தேவசகாயத்துக்கு அடுத்த ஆண்டு மே மாதம் 15-ம் தேதி வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.

குமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்தவர் தேவசகாயம். இவர் 23-4-1712-ம் ஆண்டு வாசுதேவன்- தேவகியம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தார். நீலகண்டபிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1745-ம் ஆண்டு மே மாதம் 14-ந்தேதி கிறிஸ்தவராக திருமுழுக்கு பெற்றார். 1752-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் இவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் இவர் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் மறைசாட்சியாக அறிவிக்கப்பட்டார்.

இவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று தமிழக கத்தோலிக்க திருச்சபை சார்பிலும், கோட்டார் மறை மாவட்டம் சார்பிலும், இறைமக்கள் சார்பிலும் வாடிகனில் உள்ள புனிதர் பட்டமளிப்பு பேராயத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து அதன் முதல் படியாக மறைசாட்சி தேவசகாயத்துக்கு முக்திப்பேறு பெற்றவர் என கடந்த 2-12-2012-ம் அன்று அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 21-2-2020 அன்று தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கலாம், அதற்கு தடை ஏதும் இல்லை என்ற அறிவிப்பை போப் ஆண்டவர் வெளியிட்டார். இந்தநிலையில் அடுத்த ஆண்டு (2022) மே மாதம் 15-ந் தேதி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு கடிதத்தை புனிதர் பட்ட பேராயத்தின் தலைமைச் செயலாளர் பேபியோ பபானே, தேவசகாயம் புனிதர் பட்ட திருப்பணிக்குழு வேண்டுகையாளர் அருட்பணியாளர் டான் ஜோசப் ஜான் எல்பெஸ்டனுக்கு அனுப்பியுள்ளார்.

அவர் அந்த உத்தரவு கடிதத்தை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மற்றும் புனிதர் பட்ட திருப்பணியின் துணை வேண்டுகையாளரும், கோட்டார் மறைமாவட்ட பொறுப்பாளருமான அருட்பணியாளர் ஜான் குழந்தைக்கும் அனுப்பியுள்ளார். குமரி மாவட்டத்தில் பிறந்து மறைந்த தேவசகாயம் தமிழகத்தின் முதல் புனிதர், குமரி மாவட்டத்தின் முதல் புனிதர் என்ற பெருமையை பெறுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து