முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்துமஸை முன்னிட்டு வண்ண விளக்குகளால் மிளிர்ந்த லண்டன்

சனிக்கிழமை, 20 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

கிறிஸ்துமஸை முன்னிட்டு, பிரிட்டன் தலைநகர் லண்டனில் வெவ்வேறு நாள்களில் வெவ்வேறு தெருக்களில் விளக்குகள் ஏற்றப்படுவது வழக்கம். ஆனால், முதல்முறையாக ஒரே நேரத்தில் அனைத்து தெருக்களிலும் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. உள்ளூர் வணிக அமைப்பான, தி ஹார்ட் ஆப் லண்டன் பிஸ்னஸ் அல்லயனஸ் இந்த வண்ண விளக்குகளை ஏற்பாடு செய்துள்ளது.

ஆக்ஸ்போர்டு தெருவில், நட்சத்திர வடிவில் வண்ண விளக்குகள் வடிவமைக்கப்பட்டு மிளிர வைக்கப்பட்டன. பெரும்பாலான பெரிய வணிக நிறுவனங்களின் ஜன்னல்களில் வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்படவில்லை. ஆனால், திருவிழா கொண்டாட்ட மன நிலைக்கான சமிக்ஞைகள் அங்கு தென்பட தொடங்கியுள்ளன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ள நிலையில், உள்ளூர் மக்கள் ஷாப்பிங் செய்ய இந்த வண்ண விளக்குகள் கவர்ந்திழுக்கும் என வணிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து