முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்டெல்-ஐ தொடர்ந்து வோடாபோன் ஐடியா ப்ரீபெய்ட் கட்டணமும் 25 சதவீதம் உயர்வு: நாளை முதல் அமலாகிறது

செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021      வர்த்தகம்
Image Unavailable

ஏர்டெல்-ஐ தொடர்ந்து வோடாபோன் ஐடியா ப்ரீபெய்ட் கட்டணத்தையும் 25 சதவீதம் உயர்த்தி வோடாபோன் ஐடியா அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை (நவம்பர் 25-ம் தேதி) முதல் அமலாகிறது.

ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டணத்தை 25 சதவீதம் வரை அதிகரித்து நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. அடிப்படையான டாப் அப் திட்டங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி 48 ரூபாய் திட்டம், 58 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். 98 ரூபாய் திட்டம், 118 ரூபாயாகவும், 251 ரூபாய் திட்டம், 301 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோலவே ஆண்டு முழுவதுக்குமான திட்டங்களுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. ஏஆர்பியு நெட்வொர்க் மற்றும் ஸ்பெக்ட்ரமுக்கு தேவைப்படும் கணிசமான முதலீடுகளை செயல்படுத்தும் நோக்கத்துடன் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளதாக ஏர்டெல் தெரிவித்தது. 

இந்தநிலையில் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் கட்டணங்களை 25% வரை உயர்த்துவதாக வோடாபோன் ஐடியா அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு பயனருக்கான தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சராசரி வருவாயை மேம்படுத்த உதவும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நவம்பர் 25-ம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவு நிலை திட்டத்தின் விலை 25% அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

28 நாட்கள் கொண்ட திட்டத்துக்கான கட்டணம் ரூ.79-ல் இருந்து ரூ.99 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 11 மொபைல் போன் திட்டங்கள் மற்றும் நான்கு டேட்டா பேக்கேஜ்கள் 20% அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் என்று வோடாபோன் ஐடியா அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து