எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : உலகமெங்கும் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ‘ஒமைக்ரான்’ மிகவும் மோசமானது என்று மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் மட்டுமல்ல, எந்தவொரு வைரசும் உருமாறுவது இயல்புதான், அதற்காக இப்படியா?” என்று உலக அளவில் மருத்துவ விஞ்ஞானிகளை அலற வைத்திருக்கிறது புதிதாக தோன்றியுள்ள உருமாறிய வைரஸ். அது மட்டுமல்ல, உலக நாடுகளின் பங்குச்சந்தைகளையெல்லாம் ஒரே நாளில் சரிவை சந்திக்க வைத்திருக்கிறது. இந்த புதிய வைரசுக்கு பெயர் பி.1.1.529 என்பதாகும்.
இந்த வைரசின் தாயகம், தென் ஆப்பிரிக்கா. அங்குதான் முதன்முதலாக இந்த வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது. அதைத்தொடர்ந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது. இதுவரை 60 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் பாதித்து இருக்கிறது. இதுவரை உலகமெங்கும் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் இதுதான் மிக மோசமானது என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள். நோய் எதிர்ப்புச்சக்தியை தவிர்க்கும் தன்மையை இந்த வைரஸ் கொண்டிருப்பதுதான் மருத்துவ அறிவியல் சமூகத்தை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் பெரிய அளவில் வேலை செய்து விடாது. நிச்சயமாக குறைவான செயல்திறனையே கொண்டிருக்கும் என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு உயிரியல் பேராசிரியர் ஜேம்ஸ் நைஸ்மித். இது அதிவேகமாக பரவும் என்றும் எச்சரிக்கிறார் இவர்.
இது நம்ப முடியாத அளவுக்கு உருமாறி உள்ளது, அசாதாரணமான பிறழ்வுகளின் மண்டலமே உள்ளது, இது தற்போது பரவி வந்துள்ள வைரஸ் வகைகளில் இருந்து மிகவும் வித்தியாசமானது என்கிறார், தென் ஆப்பிரிக்காவின் தொற்றுநோய் பதிலளிப்பு மற்றும் கண்டுபிடிப்பு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் துலியோ டி ஒலிவேரா. இந்த திரிபு எங்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது, இது பரிணாம வளர்ச்சியில் மிகப்பெரும் பாய்ச்சலைக் கொண்டுள்ளது, நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளை கொண்டிருக்கிறது என்று வியக்கிறார் இவர்.
இந்த உருமாறிய வைரசில் 50 மரபணு பிறழ்வுகள் இருக்கின்றனவாம். வைரசின் ஸ்பைக் புரதத்தின் இடையே மட்டுமே 30-க்கும் அதிகமான பிறழ்வுகள் உள்ளனவாம். பொதுவாக தடுப்பூசிகள் இந்த ஸ்பைக் புரத இழைகளைத்தான் குறி வைக்கின்றன. மனித உடல்களுக்குள் ஊடுருவ கொரோனா வைரஸ் இந்த புரத இழையைத்தான் பயன்படுத்துகின்றன.
காகிதத்தில் பயங்கரமாக தோன்றிய உருமாறிய வைரஸ்கள் பல உண்டு. பீட்டா வைரஸ் அப்படிப்பட்ட ஒன்றாக மக்களை கவலையில் ஆழ்த்தியது. நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருந்து தப்பிப்பதில் இது சிறந்தது. ஆனால் இதையெல்லாம் கடந்து யதார்த்தத்தில் அதிவேகமாக பரவக்கூடிய டெல்டா வைரஸ்தான் உலகை கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது. இந்த புதிய வைரஸ் அதிவேகமாக எந்த அளவுக்கு பரவும், கொடூரமானதா, தடுப்பூசிகள் கண்டுபிடித்தது பலன் அளிக்குமா என்பதையெல்லாம் ஆய்வக ஆய்வுகள்தான் சொல்லும். அதற்காக பொறுத்திருக்க வேண்டும்.
இந்த வைரசால் முதலில் விழித்துக்கொண்டுள்ள நாடு இங்கிலாந்து என்று சொல்ல வேண்டும். இங்கிலாந்து சுகாதார முகமையின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் சூசன் ஹாப்கின்ஸ், இதுவரை நாம் பார்த்ததில் கவலை அளிக்கிற வைரஸ் இதுதான். இந்த வைரஸ் முதன்முதலாக காணப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவின் கவுடெங்கில் ‘ஆர் வேல்யூ’ என்று சொல்லப்படுகிற இதன் பரவல் விகிதம் 2 ஆக உள்ளது. இது உண்மையிலேயே மிகவும் அதிகம் என்றும் இவர் சொல்கிறார்.
இதன் காரணமாக இங்கிலாந்தில் இப்போது வாரத்துக்கு 50 ஆயிரம் வைரஸ் கேஸ்களை மரபணு வரிசைப்படுத்தி சோதிக்கிறார்கள், இது அதிகபட்ச எண்ணிக்கை என்பதுவும் டாக்டர் சூசன் ஹாப்கின்ஸ் தகவல். இந்த வைரஸ் பரவல் தடுப்பதற்காக தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசொத்தோ, எஸ்வாத்தினி ஆகிய 6 நாடுகளின் விமானங்களை இங்கிலாந்து தற்காலிகமாக நிறுத்தி விட்டது.
புதிய உருமாறிய வைரஸ் மிகவும் கவலை அளிக்கிறது, இதனால்தான் தென் ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களை தடை செய்திருக்கிறோம் என்று இங்கிலாந்து சுகாதார மந்திரி சாஜித் ஜாவித் தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்தைப் போன்று ஜெர்மனி, இத்தாலி, இஸ்ரேல், சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
தென் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இருந்து வருகிற விமானங்களை நிறுத்த ஐரோப்பாவும் விருப்பம் வெளி யிட்டுள்ளது. இதுபற்றி ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறும்போது, “ஐரோப்பிய கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் தென் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இருந்து வருகிற விமான பயணங்களை நிறுத்த அவசரகால தடையை செயல்படுத்தலாம் என முன்மொழிகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் பற்றி ஆலோசிக்க, விவாதிக்க உலக சுகாதார அமைப்பு அவசரமாக கூடியது. நேற்று நடந்த கூட்டத்தில், விஞ்ஞானிகள் கிரேக்க எழுத்தான ‘ஒமைக்ரான்’ என்பதை இந்த புதிய வகை கொரோனா வைரசுக்கு பெயராக சூட்டியுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 19 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Sep 2025- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- மதுரை நவநீதகிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- பிரான்மலை சேக்
-
இன்றைய ராசிபலன்
14 Sep 2025 -
இன்றைய நாள் எப்படி?
14 Sep 2025