முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: எடப்பாடி பழனிசாமி உதவியாளர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலம் : அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 50 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளரை செய்து கைது சேலம் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டு காலமாக இருந்து வருகிறார்.  எடப்பாடி பழனிச்சாமிக்கு உதவியாளராக இருந்த போது ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக பல்வேறு புகார்கள் வந்தன.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் உதவி பொறியாளராக வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 17 லட்சத்தை தமிழ்ச்செல்வன், புரோக்கர் செல்வகுமார் மூலமாக பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக தெரிகிறது. இது தொடர்பாக தமிழ்ச்செல்வன் கடந்த மாதம் 26-ம் தேதி சேலம் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து மணி மீது இரண்டு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு மணி தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அரசு வேலை வாங்கித் தருவாக பல்வேறு நபர்களிடம் பணம் பெற்று மணி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. ரூ.50 லட்சம் வரை மோசடி செய்திருக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பழனிசாமி உதவியாளர் மணியை சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்து மோசடி புகார்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!