முக்கிய செய்திகள்

கனெக்ட்டில் இணந்த அனுபம் கெர்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      சினிமா
Anupam-Kerr 2021 11 28

Source: provided

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் ‘கனெக்ட்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் மீண்டும் வந்திருக்கிறார் நடிகர் அனுபம் கெர். பாலிவுட்டின் பிரபல நடிகர் தனது தயாரிப்பில் பங்கு பெறுவதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.  தனது கதாப்பாத்திரங்களை வெகு கவனமுடன் தேர்வு செய்து வரும் நடிகர் அனுபம் கெர், கனெக்ட் படத்தின் திரைக்கதையில் கவரப்பட்டு இப்படத்தில் பங்கேற்றிருக்கிறார். இது குறித்து இயக்குநர் அஷ்வின் சரவணன் பெருமிதத்துடன் கூறுகையில்,  இந்தப் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தை அனுபம் கெர் ஏற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் அவரது திரைப்படங்களை பார்த்து வளர்ந்தோம், அவர் எங்கள் திரைப்படத்தில் இருப்பது உண்மையில் பெருமையாக இருக்கிறது என்றார். இப்படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்கிறார், பிருத்வி சந்திரசேகர் இசையமைக்கிறார், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பைக் கையாளுகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து