முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வனம்- விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ஒரு நுண் கலைக்கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டு வரும்போது ஒரு அறையில் தற்கொலை நிகழ்கிறது. இந்நிலையில் அந்தக் கல்லூரியில் மாணவராக வந்து சேர்கிறார் வெற்றி. கல்லூரியைப் பற்றிய ஆய்வுக்காக வருகிறார் ஸ்மிருதி வெங்கட். ஆனால், குறிப்பிட்ட அறையில் வசிப்பவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது ஏன் நடக்கிறது என ஆராய்கிறார்கள் வெற்றியும் ஸ்மிருதியும். அப்போதுதான் ஒரு ஜமீந்தாரின் வெறியாட்டம் குறித்துத் தெரியவருகிறது. ஜமீனுக்கும் அந்த கல்லூரிக்கும் என்ன தொடர்பு, குறிப்பிட்ட அறையில் வசிப்பவர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதெல்லாம் மீதிக் கதை. ஒரு ஜமீனின் கதையிலிருந்து ஆரம்பித்து, பிறகு தற்காலத்தில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களோடு இணைத்து ஒரு விறுவிறுப்பான படத்தைத் தந்திருக்கிறார்  இயக்குனர் ஸ்ரீகந்தன் ஆனந்த். சில காட்சிகளில் அழுத்தமே இல்லை. படத்தின் இறுதியில் வரும் ஜமீன்தாரின் மறுபிறவி ட்விஸ்ட் நன்றாக இருக்கிறது. ஸ்மிருதி வெங்கட், அனு சித்தாரா,  வேல ராமமூர்த்தி ஆகியோரின் நடிப்பு பாராட்டுக்குறியது. பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த வெற்றி, இந்தப் படத்தில் சுமாராக நடித்திருக்கிறார். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அருமை. மொத்தத்தில் இந்த வனம் ஒரு நந்தவனமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து