முக்கிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் புதிய மனு தாக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது

ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது.  தூத்துக்குடியில் மழையால் இயந்திரங்கள், உபகரணங்கள் உள்ள இடங்களில் நீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  இயந்திரங்கள், உபகரணங்களை சீர் செய்ய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் பெய்து வரும் மழையால் இயந்திரங்கள் துருப்பிடிக்கும் நிலையில் இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து