முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை: முதலிடம் பெற்ற தமிழகத்திற்கு விருது வழங்கினார் ஜனாதிபதி

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தமைக்காக முதலிடம் பெற்ற தமிழகத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார். அதனை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக் கொண்டார். 

டெல்லியில் நேற்று ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற 2020-ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது வழங்கும் விழாவில் முதல்வரின் வழிகாட்டுதலின்படி தமிழக சமூகநல துறை அமைச்சர் பி.கீதாஜீவன் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை வழங்கியமைக்காக தமிழகம் முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கிட. அமைச்சர் பி.கீதாஜீவன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், 

ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) பிரகடனத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 3-ம்  நாள் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தன்று மாற்றுத் திறனாளிகள் தொடர்பாக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை வழங்கி ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

இந்நாளில் மாற்றுத் திறனாளிகள் தங்களின் தனித்துவ திறமைகளை வெளிப்படுத்திட மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்குவிப்பதுடன் மாற்றுத் திறனாளிகளில் சிறந்த நபர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக சிறந்த சேவை வழங்கியவர்களுக்கு மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.

அந்த வகையில் 2020-ம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் உரிமையேற்றத்திற்கான தேசிய விருதுகள் (National Award for the Empowerment of Persons with Disabilities for the year 2020)  தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு  வழங்கப்பட்டன. அதன்படி சிறந்த பணியாளர் / சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருது சென்னை மாவட்டம் வேளச்சேரியை சேர்ந்த வேங்கட கிருஷ்ணன் (பார்வை திறன் குறையுடையோர் பிரிவு), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை (பார்வை திறன் குறையுடையோர் பிரிவு),  காஞ்சிபுரம் மாவட்டம் கானாத்தூர் ரெட்டிக்குப்பம் சேர்ந்த தினேஷ் (அறிவுசார் குறைபாடுடையோர் பிரிவு), திருச்சிராப்பள்ளி மாவட்டம் சேர்ந்த மானக்ஷ தண்டபாணி (Maneksha Thandapani) ஆகியோருக்கும் சிறந்த சான்றாளர் / முன்னுதாரணம் (Role Model) சென்னை மாவட்டம் மந்தவெளி சேர்ந்த ஜோதி (பல்வகை குறைபாடுடையோர் பிரிவு), நாமக்கல் மாவட்டம் மோகனுர் பேட்டப்பாளையம் சேர்ந்த பிரபாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமையேற்றத்தினை ஊக்குவிப்பதில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக  (Best State in Promoting Empowerment of Persons with Disabilities)  தமிழ்நாடும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் சிறந்த மாவட்டமாக (Best District in Providing Rehabilitation Service) சேலம் மாவட்டமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து