முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

38 நாடுகளில் பரவியது ஒமைக்ரான் வைரஸ்!

சனிக்கிழமை, 4 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கேப்டவுன் : ஒமைக்ரான் வைரஸ் இதுவரை  38 நாடுகளில் பரவியதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி முதல் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் தென் ஆப்பிரிக்கா, பாட்ஸ்வானா மற்றும் அண்டை நாடுகளுக்கும் பரவிய இந்த ஒமைக்ரான் தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 38 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, நார்வே, பிரிட்டன், கானா, பாட்ஸ்வானா, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க், ஜெர்மனி, கனடா, அமெரிக்கா, இத்தாலி, ஹாங்காங், சுவீடன், தென் கொரியா, பிரேசில், ஆஸ்திரியா, பெல்ஜியம், ஐஸ்லாந்து, இஸ்ரேல், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, நைஜீரியா, பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், ரீயூனியன், சிங்கப்பூர், செக் குடியரசு, பின்லாந்து, கிரீஸ், அயர்லாந்து, மலேசியா, சவுதி அரேபியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், ஜிம்பாப்வே ஆகிய 38 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமா பரவி வருகிறது.

இதையடுத்து பல்வேறு நாடுகளும் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. சர்வதேச விமான நிலையங்களுக்கு வருபவர்கள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களை தனிமைப்படுத்தி நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து