முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவுக்கு எதிரான போரில் ஒன்றாக வெற்றி பெறுவோம் : மத்திய அமைச்சர் மாண்டவியா நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஒன்றாக வெற்றி பெறுவோம் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி இயக்கம் கடந்த 2021, ஜனவரி 16  அன்று துவங்கப்பட்டது. ஆரம்பத்தில், சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. பிப்ரவரி 2 முதல், மாநில மற்றும் மத்திய போலீஸ் துறை பணியாளர்கள், ஆயுதப்படை பணியாளர்கள், ஊர்க்காவல் படையினர், குடிமைத் தற்காப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை தன்னார்வலர்கள், நகராட்சி ஊழியர்கள், சிறை ஊழியர்கள், கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பி.ஆர்.ஐ., பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் தேர்தல் பணியாளர்கள், முன்னணி பணியாளர்கள் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

தடுப்பூசி இயக்கம் மார்ச் 1 முதல் விரிவுப்படுத்தப்பட்டு, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இது மேலும் விரிவுபடுத்தப்பட்டது. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் கோவிட் தடுப்பூசிக்கு தகுதி பெற்றனர். இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்படுகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளதாவது:-

இந்தியாவில் போடப்பட்ட ஒட்டுமொத்த தடுப்பூசி 127.61 கோடியைத் தாண்டியுள்ளது. நாம் வெற்றி பெறுவோம். வாழ்த்துகள் இந்தியா. தகுதியான மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தற்போது முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது பெருமைக்கு உரியதாகும். கோவிட்டிற்கு எதிரான போரில் ஒன்றாக வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து