முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு நரேந்திர மோடி எச்சரிக்கை: 'மாற்றிக் கொள்ளுங்கள், இல்லையேல் மாற்றத்துக்கு தயாராகுங்கள்'

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

பாராளுமன்றத்தில் பா.ஜ.க உறுப்பினர்களின் வருகைப்பதிவு குறைவாக இருக்கும் விவகாரம் குறித்து எச்சரித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள், இல்லையேல் காலப்போக்கில் நடக்கும் மாற்றத்துக்குத் தயாராகுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

புது டெல்லியில் நேற்று அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற பா.ஜ.க பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி இவ்வாறு கூறினார்.

இந்த கூட்டம் குறித்து தகவல்களை வெளியிட்ட பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, முதல் முறையாக, இந்தக் கூட்டம் பாராளுமன்ற வளாகத்துக்கு வெளியே நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர்களிடம், அவரவர் தொகுதிகளில் விளையாட்டு போட்டிகளை நடத்துமாறு மோடி வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

வருகைப் பதிவு குறித்த விவகாரம் பற்றி பேசிய பிரதமர் மோடி, பாராளுமன்ற விவகாரங்களில், அனைத்து பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர்களும் தவறாது பங்கேற்க வேண்டும். குழந்தைகளிடம் ஒரு செயலை செய்ய வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினால், அவர்கள் கூட அந்தச் செயலை மீண்டும் செய்வதில்லை என்று குறிப்பிட்டார். மேலும், பாராளுமன்ற பா.ஜ.க உறுப்பினர்கள் தாங்களாகவே மாறுங்கள், இல்லையேல், காலப்போக்கில் நடக்கும் மாற்றத்துக்குத் தயாராகுங்கள் என்று மோடி தெரிவித்தார்.

பாராளுமன்ற பா.ஜ.க உறுப்பினர்களின் வருகைப் பதிவு மோசமாக இருப்பது குறித்து ஏற்கனவே பல முறை மோடி குறிப்பிட்டுப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து